தமிழ்த்திரையுலகில் 80 களில் நகைச்சுவை நடிகையாக கலக்கி வந்தவர் பிந்துகோஷ். ரஜினி, கமல், என முன்னணி நடிகர்களுடன் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ள பிந்து கோஷ், 76 வயதை தாண்டிய நிலையில், உடல் நிலை நலிவுற்று வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து வருகிறார். மேலும், தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கே கஷ்டப்படுவதாக ஊடகம் ஒன்றில் கூறியுள்ளதாவது,’சினிமால நல்லா சம்பாதித்து சொந்த வீடு எல்லாமே இருந்தது ஆனா, அது எல்லாத்தையுமே பசங்களுக்காக விற்றுவிட்டேன். எனக்குன்னு நான் எதையுமே சேர்த்து வச்சுக்கவே இல்ல, புள்ளைங்க புள்ளைங்கன்னு எல்லாத்தையும் என்னுடைய பசங்களுக்காக கொடுத்தேன். ஆனால், இப்போ என்கிட்ட எதுவுமே இல்ல ஒரு அனாதை மாதிரி தான் இந்த வாழ்க்கையை நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன், இந்த வீட்டுக்கு மாத வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன்.நாங்கள் இப்போது, பணத்துக்காக ரொம்ப கஷ்டப்படுகிறோம். கையில பத்து பைசா கூட இல்ல. மருத்துவ உதவிக்காக நான் பலரிடம் உதவி கேட்டுவிட்டேன்,ஆனால், யாருமே எனக்கு உதவி செய்வதற்கு முன்வரவில்லை. சில வருடத்திற்கு முன் நான் மருத்துவமனையில் இருந்த போது, லாரன்ஸ், விஷால் இருவர் மட்டுமே உதவினார்கள். என் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. என் சிகிச்சை செலவிற்கு ரூ.5 லட்சம் தேவைப்படுகிது. அப்போது தான், ஒருவர் முதல்வர் ஸ்டாலிடம் உதவி கேட்க சொன்னாரு, அவரு கண்டிப்பா ஏதாவது உதவி பண்ணுவார், அதன் மூலமாக உடம்பை பார்த்துக்கலாம்னு சொன்னாங்க அதனால தான் அவர் கிட்ட நான் உதவி கேட்கிறேன் என்று பிந்து கோஷ் கண்ணீருடன் பேசி உள்ளார். நடிகை பிந்துகோஷின் கண்ணீர் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது