பூ , மரியான், உத்தமவில்லன், பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி திருவோத்து. இவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். எதையும் துணிச்சலாக வெளிப்படையாக பேசி விடும் பார்வதி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை பார்வதி , தனது காதலில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும், இணையத்தில் டேட்டிங் ஆப் பயன்படுத்தி வருவது குறித்தும் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், ” நான் டேட்டிங் ஆப்பில் அக்கவுன்ட் வைத்துள்ளேன். அவ்வப்போது அதில் நல்ல பசங்கள் உள்ளார்களா என்று பார்ப்பேன். ஆனால், எனக்கு நேரில் பார்த்து பழகி வரும் காதல் மீது தான் நம்பிக்கை.நான் முன்பு ஒருவரை காதலித்தேன். காதலில் எனக்கு இருக்கும் மிக பெரிய பிரச்சனை என் முன் கோபம் தான். அதன் காரணமாக அந்த காதல் முறிந்து விட்டது. அதனால் இனிமே காதலிக்கும் முன் பலமுறை யோசித்து காதலில் விழ முடிவெடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.