‘தி பாரடைஸ் ‘ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியானது!
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி SLV சினிமாஸ் – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெலா மற்றும் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி ஆகியோருடன் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான படத்திற்காக இணைகிறார். இவர்கள் இணைந்திருக்கும் புதிய படம் ‘தி பேரடைஸ்’. தற்போது தயாரிப்பின் தொடக்க நிலையில் உள்ளது. மேலும் நானியை இதற்கு முன் ஏற்றிராத தைரியமான- மிக வலிமையான கதாபாத்திரத்தில் தோன்றுவதையும் உறுதியளிக்கிறது.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ‘ரா ஸ்டேட்மென்ட்’ எனும் பெயரில் பிரத்யேக வீடியோவை வெளியிட்டனர். அந்த காணொளியின் முதல் காட்சியிலிருந்து ‘ரா – RAW’ என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். சூழல் – மொழி- கதை – பின்னணி – ஆகியவை கரடு முரடானவை மற்றும் பண்படுத்தப்படாதவை. இந்தக் காட்சி ஒருவகையான மறுப்புடன் தொடங்குகிறது. அசலான உண்மை – அசலான மொழி – ஆகியவை வரவிருக்கும் விசயங்களுக்கான த்வொனியை அமைக்கிறது. ஒரு சக்தி வாய்ந்த குரல் வழியாக இக்கதையின் மையம் குறித்து விவரிக்கப்படுகிறது.
அதில், ” வரலாற்றில் எல்லோரும் கிளிகள் மற்றும் புறாக்களை பற்றி எழுதி இருக்கிறார்கள். ஆனால் அதே இனத்தில் பிறந்த காகங்களைப் பற்றி யாரும் இதுவரை எழுதியதில்லை. பசியால் வயிறு எரிந்த காகங்களின் கதை இது. பல காலமாக நடந்து வரும் சடலங்களின் அழுகைகள் – தாயின் மார்பிலிருந்து பாலில் அல்ல.. ரத்தத்தில் எழுப்பப்பட்ட ஒரு சமூகத்தின் கதை. ஒரு தீப்பொறி பற்ற வைக்கப்பட்டு, முழு சமூகத்தையும் உற்சாகத்தால் நிரப்பியது. ஒரு காலகட்டத்தில் இழிவுபடுத்தப்பட்ட காகங்கள் இப்போது தங்கள் கைகளில் கூரிய வாள்களை வைத்திருக்கின்றன. அந்த காகங்களை ஒன்றிணைத்த ஒரு கலகக்கார இளைஞனின் கதை இது. அந்த இளைஞன் ஒரு தலைவராக மாறிய கதை…” என அந்த குரல் விவரிக்கிறது. இந்த ரா ஸ்டேட்மென்ட் மூலம் ‘தி பாரடைஸ்’ படத்திற்காக இன்றுவரை நானியின் மிகவும் முரட்டுத்தனமான மற்றும் தீவிரமான கதாபாத்திரத்தை காட்சிப்படுத்துகிறது என்பதை குறிக்கிறது. ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் செய்துவரும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ அனிருத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , மற்றும் ஸ்பானிஷ் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ரா ஸ்டேட்மென்ட் எனும் பிரத்யேக வீடியோ பார்வையாளர்களுக்கு
எதிர்பாராததை வழங்குகிறது.