நான் தனுஷின் ஜெராக்ஸ் காப்பியா?- பிரதீப் ரங்கநாதன் பரபரப்பு பேட்டி!
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில்,பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ தமிழ்’ தெலுங்கு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதனிடம், செய்தியாளர்கள் தரப்பில்,” நீங்கள் தனுஷ் மாதிரி இருப்பது உங்களுக்கு சாதகமாக உள்ளதா இல்லை பாதகமாக உள்ளதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கும் போது, ” நான் எப்போது என்னை கண்ணாடியில் பார்த்தாலும் நான் என்னைத்தான் பார்க்கிறேன். நான் இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இரண்டு படங்களுமே வெற்றி பெற்றுள்ளது” என்றவரை இடைமறித்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கூறியதாவது,” எனக்கு பிரதீப் ரங்கநாதன் அவராகவே தான் தெரிகிறார். நீங்கள் கூறும் வேறு ஏதோ ஒரு நடிகர் போலத் தெரியவில்லை. இந்தக் கேள்விகள் சும்மா கேட்க வேண்டும் எனவும், ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனவும் கேட்கப்படுகிறது. பிரதீப், பிரதீப் ஆகத்தான் உள்ளார், வேறு யார் போலவும் இல்லை” எனக் கூறினார். இருவரும் தனுஷின் பெயரை குறிப்பிடாமல் பதில் அளித்தது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.