
தொடர்ந்து இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மர்மர் படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் பேசும் போது, “அனைவருக்கும் வணக்கம். மீண்டும் சந்திக்கிறோம். நீங்களும் தெம்புடன் காணப்படுகின்றீர்கள், நாங்களும் தெம்புடன் இருக்கிறோம். முதலில் இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு என் மீதும், மற்றவர்கள் மீதும் அதிக நம்பிக்கை இருந்தது. அதே நம்பிக்கையை நீங்களும் வைத்தீர்கள். இதனால் தான் இந்தப் படம் இப்படி வந்துள்ளது. என் மீதும், மற்ற அனைவரின் மீதும் நம்பிக்கை வைத்து, இந்தப் படத்தை தொடங்கி தற்போது இது வெற்றிப் படமாகவே மாறியிருக்கிறது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என உங்கள் தரப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. இந்தப் படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக நீங்கள் தான் இருக்கின்றீர்கள். அதற்கு மிகப் பெரிய நன்றி. தயாரிப்பு நிர்வாகி நாகராஜ் சாருக்கு மிகப் பெரிய நன்றி. படத்தில் நடித்த நடிகர்களுக்கு நன்றி. எல்லாரும் நடிகர்கள் எங்கே, என்ன பிரச்சனை என்று கேட்டீர்கள். எந்த பிரச்சனையும் இல்லை, அனைவரும் இங்கு தான் இருக்கின்றார்கள். ரிஷிக்கு மிக்க நன்றி மும்பையில் இருந்து வந்திருக்கின்றீர்கள். எனக்கு தெரிந்து எம்.எஸ் தோனிக்கு பிறகு எல்லோரும் விரும்பும் வட இந்தியராக இருப்பீர்கள் என நினைக்கிறேன். ரிஷி கேங் என்ற ஹேஷ்டேக் உருவாகி இருக்கிறது. திரையரங்கிலும் அனைவரும் கத்துகிறார்கள். தேவராஜ் சார் மிக்க நன்றி. நிறைய டார்ச்சர் செய்திருக்கிறேன், எவ்வளவு டேக் கேட்டேன் என்று எனக்குத் தான் தெரியும். எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கும், எனக்கும் தான் தெரியும். இதைத் தொடர்ந்து உங்கள் அனைவருக்கும் அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஃபவுண்ட் ஃபூடேஜ் என்பதால் இந்தப் படத்தில் ஃபோக்கஸ் புல்லர், துணை ஒளிப்பதிவாளர் மற்றும் உதவியாளர் என தனி குழு ஒன்று எப்போதும் தயாராக இருக்கும். இந்தப் படத்தில் நடிகர்களுக்கு மிகப் பெரிய சவால் அவர்கள் கேமராவை பார்த்து நடிக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். மற்ற படங்களில் கேமராவை பார்க்க வேண்டியதில்லை. ஆனால், இந்தப் படம் வித்தியாசமானது. பலர் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்கும் போது கேமராவை பார்த்து திட்டு வாங்கியுள்ளார்கள், மன்னித்து விடுங்கள். ஒளிப்பதிவாளர் ஜேசனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய ரீடேக், முதுகுவலி அதன்பிறகு சிகிச்சை என எல்லாம் முடிந்து தற்போது இங்கு வந்திருக்கிறார். ஒரு இயக்குநரின் ஒளிப்பதிவாளர் இவர். எத்தனை முறை ரீடேக் என்றாலும் சற்றும் தளர்வின்றி எடுத்துக் கொடுத்தார், மிக்க நன்றி. படத்தொகுப்பாளர் ரோஹித் தற்போது இணை இயக்குநராகவே மாறிவிட்டார். நான் எங்கு சென்றாலும் அவர் தான் என்னை அழைத்து செல்கிறார். மிக்க நன்றி ரோஹித். உங்களுக்கு அதிக படங்கள் கிடைக்கும். நாமும் சேர்ந்து பணியாற்றுவோம். எங்கள் குழுவில் கடைசியாக இணைந்தவர் கெவின் ஃபிரடெரிக், ஆனால் இன்று என்னைத் தாண்டி அவரை பற்றி தான் முதலில் பேசுகிறார்கள். மிக்க நன்றி கெவின். உங்களின் கடின உழைப்பு அபாரமானது. நான் எப்போது அழைத்தாலும் நீங்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். நாம் அதிக சோதனைகளை செய்தோம். அதற்கான அங்கீகாரத்தை நாம் திரையரங்கிற்கு சென்று பார்த்தோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குகன் சாருக்கு நன்றி. கிட்டத்தட்ட குடும்பம் போன்றே தான் இருக்கிறது. உங்களின் பணி எங்களுக்கு உதவியாக இருக்கிறது. நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை, நீங்களும் எங்களை அப்படி பார்த்துக் கொண்டீர்கள். நாங்களும் உங்களை அப்படி பார்த்துக் கொள்கிறோம் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி சார். படத்தின் புரொடக்ஷன் டிசைனர் ஹாசினி, படத்தில் எல்லா பணிகளிலும் ஈடுபட்டார். இந்தப் படத்தை பொருத்துவரை எல்லாமே பெயர் மட்டும் தான், ஆனால் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்தனர். துணை இயக்குநர்கள் இல்லை என்றில்லை, அவர்கள் எல்லா பணிகளையும் செய்தனர். துணை இயக்குநர் ஹரிஷ் கீழே விழுந்து அடிப்பட்டது. மிக்க நன்றி ஹரிஷ். கண்டிப்பாக நிறைய கஷ்டப்படுத்தி இருப்பேன். மற்றொரு இணை இயக்குநர் இருந்தார்கள். லக்ஷமி அருண். அவர் தற்போது வேறொரு படத்தில் பணியாற்றி வருகிறார். அதனால் இங்கு வரவில்லை. மிக்க நன்றிகள் லக்ஷமி அருண். தயாரிப்பு நிர்வாகி அருணுக்கு நன்றி. செல்டனால் இன்று இங்கு வரமுடியவில்லை. அவருக்கும், அவரது உதவியாளர் குழுவிற்கும் மிக்க நன்றிகள். இணை ஒளிப்பதிவாளர் கேசவனுக்கு நன்றி. எஸ்.பி.கே. புரொடக்ஷன்ஸில் தயாரிப்பாளர் மட்டுமின்றி அவரது குழு மொத்தமாக எங்களுக்கு உதவியாக இருந்தனர். அவர்கள் கூட சாப்பிடாமல் எங்களுக்கு உணவளித்து, கடினமாக உழைத்தார்கள். மேக் மீடியாவுக்கும் மிக்க நன்றிகள். நாங்கள் கேட்ட அனைத்து விஷயங்களையும் சிறப்பாக செய்து கொடுத்தார்கள், அதற்கு மிக்க நன்றி. ஊடகத்துறையை சேர்ந்த அனைவருக்கும் மிக்க நன்றி. எங்கள் படம் குறித்து இவ்வளவு அதிகமாக எழுதுவீர்கள் என்று நினைக்கவில்லை. பலரும், எங்கள் திரைப்படம் குறித்து நல்ல முறையில் எழுதியிருந்தீர்கள். மிக்க நன்றி. நீங்கள் தொடர்ந்து இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களின் பணி என்னைப் போல் மேலும் பலருக்கு ஊக்கமும், உற்சாகத்தையும் அளிக்கும். இதே குழுவுடன் அதிக மேடைகளில் உங்களை சந்திக்க விரும்புகிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி. ஸ்ரீ வெங்கடேஷ் உங்களுக்கும் பெரிய நன்றி. உங்கள் சகோதரியின் திருமண வேலைகள் நடக்கும் போதிலும் நாங்கள் எப்போது தொடர்பு கொண்டாலும் எங்களுக்கான பணியும் நடந்து கொண்டே இருந்தது. மிக்க நன்றி ஸ்ரீ வெங்கடேஷ்,” என்று கூறினார்.
இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். இந்தப் படத்தை எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஜேசன் வில்லியம்ஸ் மேற்கொள்ள ஒலி வடிவமைப்பு பணிகளை கெவின் ஃபிரடெரிக் மற்றும் படத்தொகுப்பு பணிகளை ரோஹித் மேற்கொண்டுள்ளார்.