‘வடசென்னை 2’: தனுஷ்-வெற்றிமாறன் முக்கிய முடிவு!

நடிகர் தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணியில்,கடந்த 2018-ல்  வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம், வட சென்னை. இப்படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்துக்கான தொடர்ச்சியாக ,அன்புவின் எழுச்சி என இயக்குநர் வெற்றிமாறன் படத்தை முடித்திருந்தார் .  இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது ,தற்போது ‘வடசென்னை 2’ படத்தில் மணிகண்டன் நடிக்கவிருப்பதாகவும், அதனை வெற்றிமாறன் தயாரிக்க இருப்பதாகவும், வெற்றிமாறனின் உதவியாளர்  கார்த்திகேயன் இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் வடசென்னை 2  ம் பாகம் தொடர்பாக தனுஷ் நேரடியாக வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோரை சந்த்தித்து பேசியுள்ளார் என்கிறார்கள்.இந்த  சந்திப்பில் வடசென்னை 2 படம் குறித்து  தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு அதாவது 2026 இறுதி அல்லது 2027ஆம் ஆண்டு தொடக்கத்தில் வடசென்னை 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,தனுஷ் தனது அண்ணன் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.