“செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !
‘எஸ் எஸ் குரூப்’ சிங்காரவேலன் தயாரிப்பில், ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய நகைச்சுவை வெப் தொடர் “செருப்புகள் ஜாக்கிரதை” , இந்த தொடரில், முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடிக்க, இவருடன் விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா ,உடுமலை ரவி, பழனி, சாவல் ராம், director பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வைரங்களை கடத்தி விற்கும் வியாபாரி ரத்தினம், தனது பொக்கிஷமான வைரத்தை அவனது செருப்பு ஒன்றில் மறைத்து வைக்கிறார். ரெய்டு அதிகாரிகளுக்கு பயந்து, அந்த செருப்பை ஆடிட்டரான தியாகராஜனிடம் ( சிங்கம்புலி ) கொடுக்கிறார். தியாகராஜனும் அவரது மகன் இளங்கோவும் செருப்பை தொலைத்து விடுகிறார்கள். வைரம் உள்ள செருப்பைத் தேடி அலையும், கலகலப்பான பயணம் தான் இந்த சீரிஸ். ஒவ்வொரு எபிஸோடும் கலக்கலான காமெடியுடன், பரபர திருப்பங்களுடன் வெகு சுவாராஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 28ல் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இத்தொடரின் ஒளிப்பதிவை கங்காதரன் கவனிக்க,எல்வி முத்து கணேஷ்,இசையமைத்துள்ளார்