மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் 22-03-2025 சனிக்கிழமை அன்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
காலை சுமார் 11:30 மணி துவங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து திரு. கமல் ஹாசன் அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், துணைத் தலைவர்களான திரு. ஏ.ஜி.மெளரியா, திரு. ஆர். தங்கவேலு, பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.