கமல் சார் என்னுடைய குரு ! -சிம்பு நெகிழ்ச்சி!!

 

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று  காலை நடந்தது.இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர் . இந்நிகழ்வில் நடிகர் சிம்பு பேசுகையில்,”கமல் சார் என்னுடைய ஆன் ஸ்கிரீன் குரு. இந்தப் படத்தில சர்ரியலாக நினைக்கிற அத்தனை விஷயங்களும் நடந்திருக்கு. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துல மெதுவாக அனைத்து விஷயங்களையும் கத்துக்கிட்டேன். சின்ன வயசுல இருந்து குழந்தை நட்சத்திரமாக நடிச்சிருக்கேன்.இன்னைக்கு நடிகராக அவர்கூட நடிச்சிருக்கேன். அவரும் என்னை நல்லபடியாகப் பார்த்துகிட்டாரு. படத்தைப் பற்றி பெரிதளவில் சொல்ல முடியாது.கண்டிப்பாக இது வித்தியாசமான படமாக இருக்கும். ஃபேன் பாயாக சொல்றேன் இந்த படத்துல நடிச்சதுக்கு எனக்குப் பெருமை.விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்கு அப்புறம் திரிஷாகூட இந்தப் படத்துல இணைந்திருக்கேன்.இந்தப் படத்தில் ஆரம்ப கால படப்பிடிப்பு கடினமாக இருந்தது. முன்னதாக மணிரத்னத்துடன் இணைந்து ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்தேன். சில நாட்களுக்கு பின்பு மணிரத்னம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொண்டு இந்தப் படத்தில் நடித்தேன்.இவ்வாறு அவர் பேசினார்