ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள புதிய படம்,`அக்யூஸ்ட்’ ..இப்படத்தை கன்னட இயக்குநரான பிரபு சீனிவாஸ் இயக்கியுள்ளார். உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் இப்படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து உதயா நடித்துள்ளார் கதாநாயகியாக கன்னட நடிகை ஜான்விகா நடிக்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை மருதநாயகம், கவனிக்க, நரேன் பாலகுமார்இசையமைத்துள்ளார் இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது . இந்த டீசரை நடிகர் கார்த்தி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் உதயா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு புழல் மத்திய சிறையில் உரிய அனுமதி பெற்று ‘அக்யூஸ்ட்’ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.