தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் சேகர் கம்முலா இயக்கத்தில்,ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுசுடன்
நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ளனர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் பெற்றிருப்பதாக, தனது சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்துள்ளார்.












