Monday, July 13, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பு!

admin by admin
June 18, 2025
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

You might also like

மணிரத்னம் சாரிடம் கற்ற அனுபவமே ‘அன்பே டயானா’ உருவாகக் காரணம். – பாரி இளவழகன்!

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா, சென்னையில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசுகையில்,

” மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படத்தை ஏன் முதலில் இயக்கினேன் என்றால்.. இது வரை சொல்லப்படாத ஒரு கதை. உண்மையான ஹீரோ யார் என்பதை சொல்லும் கதை இது. தான் முன்னேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் ஓயாமல் ஓடும் நம்முடைய அப்பா அம்மாக்கள் தான் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ.அவர்களுடைய கதையை ஒரு திரையரங்க அனுபவத்துடன் கூடிய கதையாக சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்த நோக்கத்தில் உருவானது தான் இந்த திரைப்படம்.

புது தயாரிப்பு நிறுவனம் – புது இயக்குநர் – புது தொழில்நுட்பக் கலைஞர்கள் – சின்ன பட்ஜெட் படம் – நாங்கள் எளிதாக காணாமல் போயிருக்கலாம். அதற்கான வாய்ப்பும் அதிகம் இருந்தது. ஆனால் இந்த கதை ஒரு அர்த்தமுள்ள கதையாக இருந்ததால்.. ஊடகங்கள் இந்த படத்தை வெகுவாக ஆதரித்தன.‌ இதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் எங்களுடன் இணைந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. இதற்காக அந்த நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு மற்றும் குகனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு நடிகர்கள் தங்களின் அர்ப்பணிப்புள்ள உழைப்பை வழங்கி கதாபாத்திரத்திற்கு உயிர்ப்பூட்டியதால் இந்த வெற்றி  கிடைத்தது. இதற்காக இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.

இந்தப் படத்திற்கு ரசிகர்களின் எதிர்வினையை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.  படம் வெளியான இரண்டாவது நாள் பல்லாவரத்தில் இரவு காட்சியை பார்த்துவிட்டு திரும்பும் ஒரு பெண் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு’ நான் ஒரு டாக்டர் என் அப்பா ஒரு ஆட்டோ டிரைவர் ‘என்று என்னிடம் சொன்னபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.

தமிழ் ரசிகர்கள் உணர்வுபூர்வமானவர்கள் மட்டுமல்ல. அறிவு பூர்வமானவர்களும் கூட. இந்த இரண்டும் இணைந்து கொடுத்தால் அவர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. மெட்ராஸ் மேட்னி அதற்கு ஒரு சிறந்த  உதாரணம். படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு நன்றி. இந்தப் படம் வெளியான பிறகு, ‘காளி வெங்கட் கொண்டாடப்பட வேண்டியவர்’ என்பதை உணர்ந்தேன். அவர் ஒரு லாபத்தை வழங்கும் நட்சத்திர நடிகர் என்பதையும் ஒரு தயாரிப்பாளராக இங்கு கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசுகையில்,

‘இந்தப் படத்திற்கு இதுவரை வழங்கிய ஆதரவிற்கும், இதற்கும் மேலும் தொடர்ந்து வழங்கப் போகும் ஆதரவிற்கும் நன்றி. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசரான அபிஷேக் ராஜா மூலம் இயக்குநர் அறிமுகமாகி கதையை சொன்னார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை சொன்னார். அது என்னுடைய தந்தையை நினைவு படுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்திற்கு சென்ற போது, சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுதனர். என் சட்டை ரசிகர்களின் கண்ணீரால் நனைந்தது. இந்த அனுபவம் புதிதாக இருந்தது மறக்க முடியாததாகவும் ஆகிவிட்டது.

நடிக்கும்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. கலையில் மட்டும் தான் அழுவதை கூட ரசிக்க முடியும். இது சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். நான் இதற்கு முன்பு அதிகமாக பார்த்த படம் கார்கி. தற்போது அதைவிட அதிகமாக பார்த்த படம் மெட்ராஸ் மேட்னி. ஏனெனில் இந்தப் படத்தின் ஒலி அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தது.

இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடிய வடிவேலுக்கு நன்றி. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்த படத்தை பதிலாக அளித்திருக்கிறார். இதனால் நான் இயக்குநரை மனதார பாராட்டுகிறேன்.  மேலும் இந்தக் கதையை.. அவர் சொன்ன விதத்தை நான் முக்கியமானதாக பார்க்கிறேன்.

ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனை திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது. இயக்குநர் கார்த்திகேயன் மணி தொடர்ந்து இது போன்ற படங்களையும் இயக்க வேண்டும். மேலும் இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. இதற்காகவும் இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

admin

admin

Related Posts

மணிரத்னம் சாரிடம் கற்ற அனுபவமே ‘அன்பே டயானா’ உருவாகக் காரணம். – பாரி இளவழகன்!
News

மணிரத்னம் சாரிடம் கற்ற அனுபவமே ‘அன்பே டயானா’ உருவாகக் காரணம். – பாரி இளவழகன்!

by admin
July 12, 2026
வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.
News

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

by admin
July 12, 2026
தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!
News

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

by admin
July 12, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!
News

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

by admin
July 11, 2026
ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!
News

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

by admin
July 10, 2026

Recent News

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

July 12, 2026
தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

July 12, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

July 11, 2026
ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

July 10, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?