ஜனநாயகன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!
விஜயின் கடைசி படமாக, வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் அடுத்த வருட பொங்கலுக்கு (ஜனவரி 9-ம் தேதி) வெளியாகவுள்ளது . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில் விஜயின் பிறந்த நாள் ஸ்பெஷலாக அப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.அந்த வீடியோவில், ஒரு உண்மையான தலைவர் அதிகாரத்திற்காக அல்ல, மக்களுக்காகவே உருவாகிறார்..” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.