‘மஹாவதர் நரசிம்மா’ படத்தின்  டிரெய்லர் வெளியானது!

ஹோம்பாலே பிலிம்ஸ், க்ளீம் புரடக்சன்ஸ் தயாரிப்பில்,சக்திவாய்ந்த கதை சொல்லல் மற்றும் இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகி  வரும்   மஹாவதர் நரசிம்மா படத்தின்  டிரெய்லரை, தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.விஷ்ணுவின் தீவிர சீடரான பிரஹலாதனைச் சுற்றி இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது, அவர் தனது நாத்திக தந்தை இரண்யகசிபுவின் எதிர்ப்பை மீறி விஷ்ணுவை வணங்குகிறார், இறைவன் பிரம்மாவிடமிருந்து அமரத்துவம் பெற்ற இரண்யகசிபுவை அழிக்க, பகவான் விஷ்ணு தனது அரிய அவதாரமான நரசிம்மராக அவதரிக்கிறார். விஷ்ணுவின் அவதாரமான மகாவதார நரசிம்மரின் பிறப்புடன் கூடிய நம்பிக்கையின் கர்ஜனையை,  இந்த டிரெய்லர் காட்டுகிறது. இது குறித்து இயக்குநர் அஷ்வின் குமார் கூறியதாவது, ” திரை மூலம் பாரதத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு கனவு, பார்வையாளர்களுக்கான புதிய யுக அனுபவமாக  உயிர் பெற்றுள்ளது. இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடிக்கும் மற்றும் விஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை இப்படங்கள் விவரிக்கவுள்ளது. என்கிறார்.