‘கடற்கொள்ளையர்கள்’ பற்றிய கேங்ஸ்டர் கதை, ‘மார்ஷல்’ !


 நடிகர்  கார்த்தி நடிப்பில் உருவாகி வந்த  ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’ ஆகிய  இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்து, அப்படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஒரு பக்கம் மும்முரமாக நடந்து வரும் நிலையில்  இன்னொரு பக்கம் ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் அவரது 29 வது  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்துக்கு தற்போது  ‘மார்ஷல்’ என பெயரிடப்பட்டுள்ளது.  ‘பீரியட்’ படமாக உருவாகி வரும் இப்படம்,ராமேஸ்வரம் – இலங்கை கடற்பகுதியில் நடந்த, ‘கடற்கொள்ளையர்கள்’ பற்றிய கேங்ஸ்டர் கதை என்கிறது படக்குழு. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்  கார்த்திக்கு ஜோடியாக முதன் முறையாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ்,பிரபு,மலையாள நடிகர் லால், ஈஸ்வரி ராவ், உள்பட பலர் நடிக்கின்றனர் .இப்படத்திற்கு சத்ய சூரியன் ஒளிப்பதிவு செய்ய,, சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.