கிரைம் – ஆக்‌ஷன் திரில்லராக உருவான, ‘சரண்டர்’ !

அப்பிட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், குமார் தயாரித்துள்ள  புதிய படத்துக்கு சரண்டர் என பெயரிடப்பட்டுள்ளது. கிரைம் – ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை  கவுதமன் கணபதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் அறிவழகனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இப்படத்தில், தர்ஷன், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்துக்கு இசையமைப்பாளராக விகாஸ் பதீசா, ஒளிப்பதிவாளராக மெய்யேந்திரன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் குறித்து அதன் இயக்குனர் கவுதமன் கணபதி கூறுகையில்,” இது சென்னையில்  நடக்கும் கிரைம் திரில்லர் திரைக்கதை. அதாவது,  தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இதன் கதை தொடங்குகிறது.
 ஒரு பக்கம் காவல் நிலையம் ஒன்றில், தேர்தல் சம்பந்தமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருள் தொலைந்து விடுகிறது.  அதைத் தேடி போலீசார் பதட்டம் மற்றும் பரபரப்புடன் பயணிக்கின்றனர். இதில் ,படத்தின் கதாநாயகனாக தர்ஷன் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் இன்னொரு பக்கம், தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யும் பணி பிரபல தாதா கும்பலிடம் வழங்கப்படுகிறது. அப்படி வாக்காளர்களுக்கு வழங்க உள்ள  பணம் திடீரென மாயமாகி விடுகிறது. மாயமான அந்த பணத்தை  சுஜித் தலைமையிலான கும்பல் தேடி அலைகிறது.இந்த கும்பலின் தலைவனாக மலையாள நடிகர் சுஜித் நடித்துள்ளார் . இந்த கும்பலும், தேர்தல் சம்பந்தமாக முக்கிய பொருளை தொலைத்து விட்டு தேடும் போலீசாரும் ஒரு கட்டத்தில் சந்திக்கும்படியான சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் திரில்லர் திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளது. நல்லவர்களுக்கு நல்லது நடக்கும் என்ற வகையில் இப்படத்தில் முடிவு எமோஷனலாக அமையும். இப் படத்தின் கதாநாயகனான  தர்ஷன் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். லால் போலீஸ் ஹெட் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார்,மலையாள நடிகர் சுஜித் தாதா வாக நடித்துள்ளார் . முனீஸ் காந்த் 50 வயதான ரவுடியாக நடித்துள்ளார்.  இதன் படப்பிடிப்பு மொத்தம் 45 நாட்களில்  படமாக்கி முடிக்கப்பட்டது. சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.  குட் ஃபீல் படமாக அமையும் இப்படத்தில் கதையின் வேகத்திற்கு தடையாக அமையும் என்பதால் பாடல்களே கிடையாது.பின்னணி இசை மிகவும் பேசப்படும்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்