‘மீஷா’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!

‘பரியேறும் பெருமாள்’, ‘சுழல்: தி வோர்டெக்ஸ்’ மற்றும் ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களில் நடித்ததற்காக கதிரின் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது மலையாளத்திலும் ‘மீஷா’ படம் மூலம் அறிமுகமாகிறார். இது தமிழ் ரசிகர்களுக்காக தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது.

டிரெய்லரின் ஆரம்ப காட்சிகளில் கதிரின் நடிப்பு பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளதால், தமிழ் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்புகள் உயர்ந்துள்ளன.

யூனிகார்ன் மூவீஸ் பேனரின் கீழ் சஜீர் கஃபூர் தயாரித்த ‘மீஷா’ திரைப்படத்தில் ஷைன் டாம் சாக்கோ (குட் பேட் அக்லி, பீஸ்ட்), ஹக்கிம் ஷா, ஜியோ பேபி, ஸ்ரீகாந்த் முரளி, சுதி கோபா, உன்னி லாலு மற்றும் ஹஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அடர்ந்த காட்டின் நடுங்கும் அமைதியில் அமைக்கப்பட்ட ‘மீஷா’ திரைப்படம், நண்பர்கள் குழுவைச் சுற்றி நடக்கும் தொடர்ச்சியான நிகழ்வுகளைப் பின்தொடர்கிறது. ஆபத்து, சிலிர்ப்பு மற்றும் உளவியல் சவால்கள் நிறைந்த திரைக்கதையாக இப்படம் உருவாகியுள்ளது இந்நிலையிவ், எம்சி ஜோசப் எழுதி இயக்கியுள்ள மலையாள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான மீஷாஇன்று வெளியாகியுள்ளது