உண்மை சம்பவங்களை மையப்படுத்தி உருவாகும் ‘நல்லாட்சி’ !
மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் யாவரும் கேளிர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்கும் புதிய படம், ‘நல்லாட்சி’. தேனிசைத் தென்றல் தேவா இசையில் உருவாகும் இப்படத்தின்சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தில், டாக்டர் யாவரும் கேளிர் , சோனியா அகர்வால் ஆகியோர் கதையின் நாயகனாகவும், நாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் ஸ்ரீ தேவா ஜனனி, யோகப்ரியா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் நளினி, வடிவுக்கரசி, அனுமோகன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் குறித்து இயக்குநர் யாவரும் கேளிர் கூறியதாவது,” ஜோசப் பென்ஷிகர் என்ற இளைஞன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக தன் பெயரை’ யாவரும் கேளிர்’ என மாற்றிக் கொள்கிறான். மேலும் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உலகின் தலைசிறந்த செழிப்பான வல்லரசாக மாற்றுவதே தனது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு பயணிக்கிறான் . நாயகன் தனது இலட்சியத்தை அடைந்தாரா,இல்லையா? என்பது தான் “நல்லாட்சி” படத்தின் சுவரசியமான திரைக்கதையாக்கப்பட்டுள்ளது. என்கிறார்.இவர் ஜோசப் பென்ஷிகர் என்ற தனது இயற்பெயரை ‘யாவரும் கேளிர்’ என மாற்றி, தன் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘நல்லாட்சி’ திரைப்படத்தை , தனது கனவு திரைப்படமாக தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார்.