பெண்களின் வலிமையை சொல்ல வரும் ‘ஆட்டி’!

லட்சுமி கிரியேஷன்ஸ் இசக்கி கார்வண்ணன் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘ஆட்டி’. இப்படத்தை  ‘மேதகு ; பாகம் 1’ மற்றும் ‘சல்லியர்கள்’ படத்தை இயக்கிய  தி.கிட்டு இயக்கியுள்ளார்  இப்படத்தில் ‘அயலி’  அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். எங்கள் குளத்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது இந்நிகழ்வில்,கலந்து கொண்ட தயாரிப்பாளரும் நாயகனுமான இசக்கி கார்வண்ணன் பேசுகையில், “இதுவரை பல படங்களில் புரட்சிப் பெண்களின் கதையை பார்த்திருப்பீர்கள். அதில் இந்த படம் முதலாக இருக்கும். மண்ணுக்கு ஒரு பிரச்சனை என்றால் பெண்கள் தான் முதலாவதாக வருவார்கள் என்பது நம் ஆதியிலேயே நடந்த சம்பவம். உலகில் முதல் பெண்கள் ராணுவம் அமைத்தது நம் தமிழர்கள் தான். அந்த பெண்களை தான் நாம் தெய்வமாக வைத்திருக்கிறோம். ஒரு ஊர் நன்றாக இருக்க வேண்டுமென்றால் பெண்கள் நன்றாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பெண்களின் வலிமையை உலகுக்கு காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தை அடிப்படையாக வைத்து தான் உருவாகி இருக்கும் படம் தான் இந்த ‘ஆட்டி’. ‘ஆட்டி’ என பெண்களை உயர்வாக தாங்கிய ஒரு சமூகம், அந்த சமூகத்துக்கான படம் இது. இவ்வாறு அவர் பேசினார்  பேசினார்.