இன்வெஸ்டிகேஷன் திரில்லரக உருவான  ” ரூம் பாய் ” !

ஏசிஎம் சினிமாஸ்  பட நிறுவனம் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ள புதிய  படத்திற்கு ” ரூம் பாய் ” என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் மூலம் சி.நிகில்  தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹர்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன்  இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், ‘யூடியூப்’ காத்து கருப்பு, சாதனா, ‘இன்ஸ்டா’  கவிதா விஜயன் மற்றும் கற்பகம் உட்பட பலர் நடித்துள்ளனர்.சி.பாரதி ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்பட கல்லூரி மாணவர் ஜெகன் ராயன் கூறுகையில்,”இது ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த இன்வெஸ்டிகேஷன் திரில்லரக உருவாக்கி இருக்கிறோம்.ஏலகிரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ரூம் பாயாக பணிபுரிகிறார் நாயகன் சஞ்சய். அந்த ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றும் ஜேம்ஸ் சக்காரியா என்பவர் நாயகன் மற்றும் அவனது நண்பர்களை காண்ட்ராக்ட்  முடிந்தும் மிரட்டி கொத்தடிமைகள் போல் நடத்தி வேலை வாங்கி வருகிறார்.ஒரு நாள் திடீரென மேனேஜர் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். அதே நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளியில் கண்காணிப்பாளராக  பணியாற்றிய இன்பதுரை என்பவர் மாயமாகிறார்.மேனேஜர் இறந்ததற்கும் கண்காணிப்பாளர் காணாமல் போனதற்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கு என்ன தொடர்பு என்பதை பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறோம்.இப்படத்தின் படப்பிடிப்புகளை இயற்கை எழில் கொஞ்சும் திருப்பத்தூர், ஏலகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தி முடித்துள்ளோம் . விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம் என்கிறார் இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை  நடிகர்   விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.