தயாரிப்பாளர்கள் சங்கம் – பெப்சி அமைப்பு மோதல் முடிவுக்கு வந்தது!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி இடையே சம்பளம் தொடர்பான கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது, இது இரு சங்கத்தினருக்கும் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சியின் மீது அதிரடி குற்றச்சாட்டுகளை முன் வைத்து, பெப்சிக்கு எதிராக புதிய சங்கத்தை உருவாக்கியது. இது இவர்களுக்கிடையேயான மோதலை மேலும் தீவிரப் படுத்தியது. இவ்விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. இந்த மோதலுக்கு தீர்வு காணும் வகையில், நீதிபதி கோவிந்தராஜன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமூகமான தீர்வும் காணப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

இந்நிலையில் ,இன்று காலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது,” நீதி மன்ற ஆணையில் இரு தரப்பினருக்கும் இடையிலான சமரசம் ஒப்பந்தம் அவர்களின் 1-1 ஒப்பந்தங்கள் 10.03.2022 முதல் 09.03.2025 வரை இருந்து வந்தது. நடந்துகொண்டிருக்கும் தயாரிப்புகளுக்கான தற்போதைய விதிமுறைகளைப் பராமரிக்கவும், ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் நிலையான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தவும் இரு சாராரும் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த ஆவணம் ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு ஒத்துழையாமை அழைப்புகளையும் திரும்பப் பெறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. செப்டம்பர் 1, 2025 தேதியிட்ட அவர்களின் தீர்வு குறித்து ஒரு கூட்டு செய்திக்குறிப்பு வெளியிடப்படும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கின்ற நீதி மன்ற ஆணைக்கிணங்க இருதரப்பு நிர்வாகிகளும் முக்கியஸ்தர்களும் கலந்து பேசியதன் அடிப்படையில் தமிழ் திரைப்பட துறை நலன் கருதி, உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க இனிவரும் காலங்களில் எந்தவித தொய்வும் இன்றி ஏற்கனவே இரு சாராரும் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி நடைமுறைப்படுத்தி திரைத் தொழிலை நடத்துவோம் என்றும், திரைத்துறை வளர்ச்சிக்காகவும், தொழிலாளர்கள் நலன் கருதியும், முதல் போடும் தயாரிப்பாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் இரு தரப்பினரும் இணைந்து பயணிக்கலாம் என்ற முடிவினை எடுத்துள்ளோம்.மேலும் திரைத்துறையில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்ட போது திரைத்துறை நலன் கருதி தாயுள்ளத்தோடு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த சம்பத்தப்பட்ட அமைச்சருக்கு அறிவுறுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தயாரிப்பளர்கள் சார்பிலும், தொழிலாளர்கள் சார்பிலும், ஒட்டுமொத்த திரைத்துறை சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்” இவ்வாறு அறிக்கையில் என்று குறிப்பிட்டுள்ளனர்