விவசாயிகளுக்கு ஆதரவாக 25-ம் தேதி நடக்கும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டத்திற்கு நடிகர் சங்கம் ஆதரவு !
விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ம் தேதி செவ்வாய் கிழமையன்று அனைத்து கட்சிகள் சார்பாக நடக்கும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது.
” பல வருடங்களாக இயற்கையாலும்,காவிரி பிரச்சனையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றபட்டு வரும் தமிழக விவசாயிகள் ,அரசிடம் வாங்கிய கடனை கட்ட முடியாமல், பலரும் தற்கொலை முடிவை நாடி வருகின்றது வேதனை அளிக்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டியது மத்திய – மாநில அரசுகளின் கடமையாகும். அதை வலியுறுத்தி வருகிற 25-ம் தேதி அனைத்து கட்சிகள் நடத்தும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறது “இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அன்று ஒருநாள் அணைத்து திரையரங்குகளும் மூடப்பட்டு காட்சிகள் அனைத்து ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு ஆதரவாக 25-ம் தேதி நடக்கும் போராட்டத்திற்கு TFPC – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம் பெப்சி உள்ளிட்ட அனைத்து திரையுலகினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.!