நடிகர் விஜய் மகன் இயக்கத்தில் உருவாகும் ‘சிக்மா’ !

நடிகர் விஜய்யின் மகன்  ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  நான்கு மாதங்கள் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் 95 சதவீத  ஷெட்யூல் நிறைவடைந்து உள்ளது .இந்நிலையில் இப்படத்துக்கு ‘சிக்மா’ என பெயரிடப்பட்டுள்ளது. .நடிகர் சந்தீப் கிஷனை இப்படத்தில் முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்கலாம்.இவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜபே, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குனர் ஜேசன் சஞ்சய் கூறுகையில், “’சிக்மா’ என்ற டைட்டில் பயமில்லாத, சுதந்திரமான, சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ள படாத ஒருவன் தன் இலக்குகளை நோக்கி நகர்வதை இந்தப் படம் பேசும். வேட்டை, கொள்ளை, காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். தமனின் துடிப்பான இசையும் சந்தீப் கிஷனின் திறமையான நடிப்பும் லைகா புரொடக்‌ஷன்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத படமாக மாற்றும். இவர்களின் திறமை மற்றும் ஆதரவால்தான் குறிப்பிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பு முடிப்பது சாத்தியமானது. ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அது முடித்த பின்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி விடும். என்கிறார். தமிழ், தெலுங்கு உட்பட பன்மொழி படமாக உருவாகும் ’சிக்மா’ சென்னை, சேலம், தலகோனா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை  கிருஷ்ணன் வசந்த், கவனிக்க,தமன், இசையமைத்து வருகிறார்.