தமிழ்த்திரையுலகில்,’காதலன்’, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, பிரபுதேவா -ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மூன்வாக்’ படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர்.
இயக்குனர் என்.எஸ். மனோஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம்,இசை, நடனம், நகைச்சுவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘பான் இந்திய’ திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து, இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வரும் நிலையில்,தற்போது இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பிரபுதேவா திருமண கோலத்தில் மாலையுடன் இரண்டு பெண்களுக்கு நடுவே நிற்கிறார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.












