நடிகர் வினுசக்கரவர்த்தி (74) காலமானார்..1002 படங்களில் நடித்த பிரபல நடிகரான இவர் சுமார் 3 ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்த அவர் இன்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார்..அவரது மனைவி பெயர் கர்ணப்பூ…அவருக்கு சரவணன் சண்முகப்பிரியா என்கிற மகன், மகள் உள்ளனர்..நடிகர்வி னு சக்ரவர்த்தி (டிசம்பர் 15, 1945) மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தார். இவர் தமிழ் நடிகரும், எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, படகா போன்ற 4 மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர, கெட்ட குணமுடைய (எதிர்நாயகன்) வேடங்களிலுமே நடித்துள்ளார். இவர் தமிழிலேயே மிகப்பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார்