கிறிஸ்துமஸ் நன்னாள் உறுதி மொழி ஏற்போம் ..
அனைவர்க்கும் ஏசு பிரான் அவதரித்த நன்னாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் .இந்தியப் பெருநாடு விடுதலை பெற்ற பிறகு மதங்களை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. அனைவரும் உறவுகளே என்கிற உரிமையுடன் வாழ்வதற்கு இந்திய அரசியல் சாசனம் சான்றாக இருக்கிறது..அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அரசியல் மேதைகள் வகுத்த வழியில் மக்கள் பயணம் செய்கிறார்கள்.
மதங்கள் கடந்த நல்லிணக்கம் இன்று சில மத வாத சக்திகளால் அச்சுறுத்தப்படுகிறது. அதற்கு இடம் கொடுக்கமாட்டோம் என்கிற உறுதியுடன் தமிழ்நாட்டு மக்கள் அந்த மதவாத சக்திகளை இனம் கண்டு விலகியே செல்கிறார்கள்.நமது ஒற்றுமைக்கு பங்கம் வருமேயானால் அந்த தீயசக்திகளை வெல்வோம் என்கிற உறுதியுடன் இன்றைய கிருஸ்துமஸ் திருவிழாவை கொண்டாடுவோம்,
மீண்டும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
—தேவிமணி