அமலாபாலின் கொண்டாட்ட ‘குடி’ ! வைரலாகும் வீடியோ!!
ஏ. எல்.விஜயுடனான திருமண முறிவுக்கு பின்னர் தொழிலதிபர் ஜெகத் தேசாயை 2 வதாக திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பிறகு சினிமா, ஆன்மிகம், பயணம் என ரவுண்டு கட்டி வரும் அமலா பால்,தற்போது கோவாவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இலாய் என்ற ஒரு மகனும் உள்ளார் ஒரு செம ஜாலியான வீக் எண்ட் பார்ட்டியை கொண்டாடியுள்ளார், இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படத்தில் கையில் ஒரு மெகா சைஸ் பாட்டிலுக்கு அருகில் அமர்ந்துள்ளார். இது மட்டும் இல்லாமல் இரண்டு கண்ணாடி டம்ளர்களில் மதுபானம் இருப்பது போலத் தெரிகிறது.மேலும் தனது காதல் கணவருடன் போட்டி போட்டுக் கொண்டு ஷாட்ஸ் குடிக்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் , “இவ்வளவு பெரிய பாட்டிலா? செம லூட்டிதான் போங்க .பொறாமையா இருக்கு என பதிவிட்டு வருகின்றனர்.இப்புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அமலா பால். தற்போது மலையாளத்தில் ‘ஹாப்ஃ’ (Half) என்ற படத்தில் நடித்துள்ளார் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.