படப்பிடிப்பில் ‘தோசை’ சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிசியான நடிகைகளில் ஒருவராக வலம்வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் .தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து வருவதால்,அங்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில்,தெலுங்கு படத்தின் படப்பிடிப்புத் தளத்தில், தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கு தோசை சுட்டு, தானே பரிமாறவும் செய்துள்ளார். தோசை கல் முன்பு நின்று கொண்டு, தெலுங்கில் காவாலா… காவாலா.. என கேட்டு கேட்டு தோசை பரிமாறுகிறார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.