பிரபல நடிகையுடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு! விவாகரத்து கோரி மனைவி சங்கீதா கோர்ட்டில் மனு தாக்கல்!!
கடந்த சில வருடங்களாகவே விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கு இடையே உறவில் விரிசல் இருந்து வந்தது இதற்கு காரணம் ஒரு நடிகை என்றும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் 12 பக்க மனுவை தாக்கல் செய்துள்ளார்.இந்த வழக்கு வரும் மார்ச் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. விசாரணையின் போது இருவரும் நேரில் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.
இவ்விவகாரம் குறித்து சங்கீதா தனது மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது திருமண வாழ்க்கை தொடக்க காலத்தில் மகிழ்ச்சியாகவே கடந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரிஇடையேயான கால கட்டத்தில் எனது வழக்கறிஞர் மூலம் விஜய்யிடம் பேசினேன். அப்போது அந்த நடிகையுடனான தொடர்பை துண்டித்து கொள்வதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் என்னை ஒதுக்கி வைத்துவிட்டு நடிகையுடன் தொடர்பை தொடர்ந்தார். இது எனக்குமிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு மீறிய இந்த உறவை நான் தட்டிக் கேட்டதால் பொருளாதார ரீதியாக எனக்கு நிறைய கட்டுப்பாடுகளை விஜய் விதித்தார். குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும், அவர்களின் மனமும் பாதிக்கப்படும் என்பதால் அவரிடமிருந்து விவாகரத்து கோருவதை தள்ளி வைத்தேன். ஆனால்,தொடர்ந்து அந்த நடிகையுடன் பல்வேறு பொது இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விஜய் சென்று வருகிறார். அந்த நடிகை என் கணவருடன் எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்.அந்த புகைப்படங்களுக்கு விஜய் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. இந்த செயல் எனக்கும் என் குழந்தைகளுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்துக்கான நோட்டீஸ் அனுப்பியும், இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விஜய் ஒத்துழைக்கவில்லை. நவம்பர் 9ஆம் தேதி விஜய்யுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக பிரிய விரும்பினேன். ஆனால் அதற்கும் அவர் ஒத்துழைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்தேன். அந்த நடிகையின் பெயரை தற்போது குறிப்பிடுவதை தவிர்க்கிறேன். கணவன்- மனைவி உறவில் விஜய் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். சென்சிட்டிவான இந்த வழக்கை தனி அறையில் விசாரிக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு முதல் என்னை வார்த்தையால் விஜய் பல முறை அவமானப்படுத்தியுள்ளார். கோர்ட்டுக்கு தேவைப்பட்டால் எனது கணவருக்கும் நடிகைக்குமான உறவு குறித்த ஆதாரங்களை வெளியித தயாராக இருக்கிறேன்.”
இவ்வாறு சங்கீதா தனது மனுவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். .மேலும் மனுவில்,விஜய் உடனான திருமண உறவு வெறும் காகித அளவில் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ள சங்கீதா, இந்த திருமணம் சரிசெய்ய இயலாத வகையில் முற்றிலும் சிதைந்துள்ளது. திருமண உறவில் மனவேதனை, அவமதிப்பு, இழிநிலை, கவலை உள்ளிட்டவை நிரம்பியிருப்பதால், விஜய் உடன் தொடர்ந்து வாழ முடியாது என்றும்,விஜய்யின் இந்த உறவால் சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் இடையறாத அவமதிப்புக்கு தான் உள்ளான போதிலும், விஜய்யின் பொது கண்ணியத்தையும் புகழையும் கருத்தில் கொண்டு, உண்மையான மற்றும் நேர்மையான சமரச முயற்சிகளை சங்கீதா மேற்கொண்டதாகவும்,குறிப்பிட்டுள்ளார்
திருமணமாகி 27 ஆண்டுகள் ஆன நிலையிலும். அரசியலால் களமிறங்கி முதல் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், தற்போது சங்கீதா விவாகரத்து கோரியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சங்கீதா லண்டனில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய தந்தை சொர்ணலிங்கம் லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபர். 1996-ம் ஆண்டு ‘பூவே உனக்காக’ திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நேரம். அப்போது விஜய்யைப் பாராட்டுவதற்காக லண்டனில் இருந்து சென்னை வந்திருந்தார் சங்கீதா. படப்பிடிப்பு தளம் ஒன்றில் விஜய்யை பலமணிநேரம் காத்திருப்புக்கு பின்னர் சந்தித்த சங்கீதா, தன்னை ஒரு ரசிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் சங்கீதாவின் குணாதிசயங்கள் விஜய்யின் பெற்றோருக்குப் பிடித்துப் போகவே, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 1999 வருடம் ஆகஸ்ட் 25,அன்று திருமணம் செய்து கொண்டனர்.இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. . இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 25 வயதான மகன் சஞ்சய், கனடாவில் திரைப்படத்துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, தற்போது இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அதேபோல் பெண் குழந்தையான 20வயதான திவ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார்.