Wednesday, July 29, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘மேட் இன் கொரியா’ (விமர்சனம்.) நெகிழ்ச்சியான அனுபவம்!

admin by admin
March 14, 2026
in Reviews
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்’ சார்பில், ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், ரா. கார்த்திக் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம், மேட் இன் கொரியா. இதில் பிரியங்கா மோகன், பார்க் ஹே-ஜின் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவர்களுடன், தென் கொரிய நடிகர்கள் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, பிரசன்ன குமார். பாடல்களுக்கு இசையமைத்தவர்கள் ஹேஷாம் அப்துல் வஹாப், சைமன் கே. கிங், தரன் குமார். பின்னணி இசையமைத்திருக்கிறார், தரன் குமார். இத்திரைப்படத்தின் பெரும் பகுதி தென் கொரியாவில் படமாக்கப்பட்டுள்ளது.  இத்திரைப்படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் மார்ச் 12 முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

பிரியங்கா மோகன், பள்ளிப்படிக்கும் காலத்திலிருந்தே தென் கொரிய நாட்டின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவர் வளர வளர, அவரது கொரிய நாட்டின் மீதான ஆசையும் அதிகரித்து அதை ஒரு லட்சியமாகவே எடுத்துக்கொள்கிறார். இந்த சூழ்நிலையில், காதலனால் ஏமாற்றப்பட்ட பிரியங்கா மோகன், தன்னந்தனியாக கொரியா வந்து சேர்கிறார். தங்குவதற்கு இடமோ, வேலையோ இல்லாத, மொழி புரியாத சூழலில், அவர் என்ன செய்தார்? என்பதை உணர்வுகளும், உணர்ச்சிகளும் கலந்த வடிவத்தில், ரசிக்கும்படி சொல்லப்பட்டிருப்பது தான், இந்த ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் கதை!

You might also like

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

‘அருள்வான்’ – விமர்சனம்!

‘அன்பே  டயானா’ – விமர்சனம்!

‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் தவிர, அநேக காட்சிகள் தென் கொரிய நாட்டின் அழகு மிளிரும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இது, படத்தினை ரசித்துப் பார்க்கும் விதமாகவும், ரசிகர்கள் அந்த இடத்திற்கே சென்று விடுவதைப்போன்ற உணர்வினையும் கொடுக்கிறது, பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவால். இந்த காட்சிகளுக்கேற்ற தரன் குமாரின் பின்னணி இசை மேலும் ரசிக்கும் விதமாக அமைகிறது. இசை, ஒளிப்பதிவு இரண்டுமே படத்தின் பலமாக அமைந்திருக்கிறது. சக மனிதர்கள் மீது காட்டப்படும் பரிவும், பாசமும் எத்தகைய முக்கியமான ஒன்று. என்பதனை பிரியங்கா மோகன் மூலம் அழகாகவும், நெகிழ்ச்சியாகவும் சொல்லி மனம் நிறைகிறார். இயக்குநர் ரா. கார்த்திக்.

‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார், பிரியங்கா மோகன். படத்தின் முன்னணி, முக்கிய கதாபாத்திரம் என்பதை உணர்ந்து, அழகாகவும் ரசிக்கும்படியும் நடித்துள்ளார். காதலனால் ஏமாற்றப்பட்டு மொழி தெரியாத நாட்டில், திரும்பவும் மனமில்லாமல் விமான நிலையத்தில் கலங்கி நிற்கும் காட்சியிலும், புதிதாக கிடைத்த நண்பர்களிடத்தில் குதூகலமாக வலம் வரும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். படத்தில் காணப்படும் லாஜிக் மீறல்களை இவரது நடிப்பு மறைத்து விடுகிறது.

பிரியங்கா மோகனின் காதலராக நடித்திருக்கும் ரிஷிகாந்த், பார்க் ஹே-ஜின், நோஹூ ஜின், ஜாங் ஜேஹியான் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுமே காட்சிகளுக்கேற்ற திறமையான நடிப்பினை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்கள்.

மனிதர்கள், சக மனிதர்கள் மீது காட்டும் அன்பும் அரவணைப்பும்  எத்தகைய உயர்ந்த செயல். என்பதை ஊட்டியின் சிலிர்ப்புடனும், கொரியாவின் பூவாய் தூறும் பனியுடனும், மனம் கவரும் விதத்தில் இதமாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் ரா.கார்த்திக்.

‘மேட் இன் கொரியா’  –  நெகிழ்ச்சியான அனுபவம்!

admin

admin

Related Posts

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!
Reviews

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

by admin
July 23, 2026
‘அருள்வான்’ – விமர்சனம்!
Reviews

‘அருள்வான்’ – விமர்சனம்!

by admin
July 17, 2026
‘அன்பே  டயானா’ – விமர்சனம்!
Reviews

‘அன்பே  டயானா’ – விமர்சனம்!

by admin
July 17, 2026
‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!
Reviews

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!
Reviews

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

by admin
July 11, 2026

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர் வெளியானது!

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர் வெளியானது!

July 28, 2026
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ :   ‘வானே வானே’ பாடல் வெளியானது!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ : ‘வானே வானே’ பாடல் வெளியானது!

July 28, 2026
‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு  விழா!

‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!

July 28, 2026
தமிழ் சினிமா பி.ஆர்.ஓ யூனியனின் புதிய நிர்வாகிகள் தேர்வு: அமைச்சர் ராஜ் மோகன் நேரில் வாழ்த்து!

தமிழ் சினிமா பி.ஆர்.ஓ யூனியனின் புதிய நிர்வாகிகள் தேர்வு: அமைச்சர் ராஜ் மோகன் நேரில் வாழ்த்து!

July 28, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?