‘உலகநாயகன்’ வெளியிட்ட “டார்க் ஜெயன்ட் “ பர்ஸ்ட்லுக் !

பயோவன் கிரியேஷனிசம் சார்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன் தயாரித்துள்ள புதிய படத்துக்கு  “டார்க் ஜெயன்ட் “என பெயரிடப்பட்டுள்ளது.கே எஸ் கிஷன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் சோனியா அகர்வால், அயலி மதன், ஜோவிட்டா லிவிங்ஸ்டன்,அமுதவாணன், லிவிங்ஸ்டன் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின்  படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது விரைவில் இப்படம் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்டு படக்குழுவை  வாழ்த்தியுள்ளார். இப்படத்தின்  பாடல்களை கங்கை அமரன் எழுத, விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார்.