ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரித்துள்ள திரைப்படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”. வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். மும்பை அழகி ஏஞ்சல் நாயகியாக அறிமுகமாகிறார். ரோபோ சங்கர், பப்லு பிருத்திவிராஜ், பேரரசு, அரவிந்தராஜ், வாழை ஜானகி, மதுமிதா, விஜய் டிவி முல்லை, புதுப்பட்டு சக்திவேல், சிரஞ்சீவி, சூப்பர்குட் சுப்பிரமணி, பாய்ஸ் ராஜன், ஓஏகே சுந்தர், துரைபாண்டியன், ஸ்ரீதேவி, பூர்ணிமா, சுஷ்மிதா, நிஷா இவர்களுடன் ஆகாஷ் முத்து என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவை வில்லியம்ஸ் செய்கிறார். இசை பாவலர் வரதராஜனின் புதல்வர் சிவராமன். பின்னணி இசை கார்த்திக் ராஜா. இதன் படப்பிடிப்பு.குழு மணாலி, கோவா, ஜவ்வாது மலை, மகாபலிபுரம் போன்ற இடங்களில் நடைபெற்றது.
எல்லையை பாதுகாக்கும் ஒரு கமாண்டோவின் வாழ்வில் வரும் காதலை மையப்படுத்தி, வித்தியாசமான காதல் கதையாக இயக்குனர் வீர அன்பரசு இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
தேர்தலுக்கு மறுநாள் ஏப்ரல் 24ஆம் தேதி இப்படம் தமிழ்நாடு முழுவதும் திரைக்கு வருகிறது.
ஜவ்வாது மலையில் உள்ள பீமா நீர்வீழ்ச்சிக்கு கீழ் உள்ள பள்ளத்தாக்கில், சுற்றுலா பயணிகளுக்கு கூட அனுமதி இல்லாத இடத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. மாலை படப்பிடிப்பு முடிந்தவுடன், யூனிட் நபர்கள் ஒவ்வொருவராக பாதுகாப்பாக மேலே அனுப்பிவிட்டு, கேமரா உபகரணங்களை எடுத்து வர முடியாமல், மறுநாள் காலையில் சென்று உபகரணங்களை எடுத்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட ரிஸ்க்கான இடங்களில் இப்படப்பிடிப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












