‘காஞ்சனா’ படத்தின் முதல் 3 பாகமாக முதல் பாகமாக வெளியான “முனி” திரைப்படத்திலிருந்து தொடங்கி “காஞ்சனா”, “காஞ்சனா 2”, “காஞ்சனா 3” என தொடர்ச்சியாக ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக 4வது பாகம் வெளியாக உள்ளது.நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கி ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி இணைந்து நடித்து வருகின்றனர். இவர்களுடன் கோவை சரளா, ஸ்ரீமன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வரும் நிலையில், காஞ்சனா 4 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.ந்தைய பாகங்களை போல இந்த படத்திலும் ஹாரர், காமெடி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சி கலந்த திரைக்கதை இருக்கும் என்கிறது படக்குழு.












