ஸ்ரீ மோயலா புரொடக்ஷன் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு “கருங்கல்” என பெயரிடப்பட்டுள்ளது இப்படத்தின் மூலம் கமலேஷ் முத்து கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தை ஷாம் டேனியல் இயக்கித் தயாரிக்கிறார்.திரைப்படத் தொடக்க விழாவில் திரைத்துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு, இயக்குநர் ஷாம் டேனியல் மற்றும் அறிமுக நாயகன் கமலேஷ் முத்து உள்ளிட்ட படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இப்படம் குறித்து அதன் இயக்குனரும் படத்தயாரிப்பாளருமான ஷாம் டேனியல் கூறுகையில்,”தன் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற ஒரு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பல வருடங்கள் கழித்து நடக்கவிருக்கும் திருவிழாவை புறக்கணிக்கிறார்கள் அவர்களின் முயற்சிகளுக்கு கதாநாயகன் பக்க பலமாக இருக்கிறான் பொதுமக்களோடு சேர்ந்து கதாநாயகன் எடுக்கும் முயற்சி அவர்களுக்கு கை கொடுத்ததா அந்த சிறுவர்களின் கனவு நிறைவேறியதா அவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செயல் மகிழ்ச்சியை தந்ததா மன வேதனையை தந்ததா என்பதே கருங்கல் லின் மையக்கதை.” என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஜே.டி. விமல் கவனிக்க,எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்து வருகிறார்.இப்படத்தின் தொடக்க விழாவில் திரைத்துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு, இயக்குநர் ஷாம் டேனியல் மற்றும் அறிமுக நாயகன் கமலேஷ் முத்து உள்ளிட்ட படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.












