‘டிரைடெண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் சார்பில், ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் சனத், மடோனா செபாஸ்டியன், இமயா.டி, வாட்ஸ்-அப் மணி, டெப்னிதா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்பட, ஹார்ட்டின். இயக்கியிருக்கிறார் கிஷோர் குமார்.
இசை : ராஜேஷ் முருகேசன். ஒளிப்பதிவு : முகேஷ்வரன்.வி.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் முக்கோணக் காதல் கதை. அதை அமைதியான, அழகான திரைக்கதை மூலம் ரசிக்கத்தக்க வகையில் கொடுத்திருக்கிறார், இயக்குநர் கிஷோர் குமார்.
மடோனா செபாஸ்டியனுடனான கல்லூரிக் காதல் தந்த பிரிவால் ஜெய்ப்பூரில் உள்ள தனது நண்பரின் உணவகத்தில் பணியாற்றி வருகிறார் நாயகன் சனத். அங்கே ஐடி துறையில் பணிபுரியும் பெண் இமயாவும், சனத்தும் நண்பர்களாக பழகுகி வருகிறார்கள். சனத், அவரது காதலை ஏற்க மறுத்து, அதற்கான காரணத்தையும் கூறுகிறார். இருந்தும் சனத் மீது காதல் கொண்டு வருகிறார், இமயா. இந்த சூழலில், சனத்தும் மடோனா செபாஸ்டியனும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சனத் மீண்டும் மடோனாவை காதலிக்க தொடங்குகிறார். ஆனால் மடோனா அதற்கு மறுக்கிறார். மடோனா சம்மதம் சொன்னாரா? சனத்தின் மீதான இமயாவின் காதல் என்ன ஆனது. என்பதே ‘ஹார்ட்டின்’ படத்தின் மீதிக்கதை.
கல்லூரி நாட்களில் நாயகன் சனத் மடோனாவை விரட்டி விரட்டி காதலிக்கும் போதும், அவர் மீது அதிக உரிமை எடுத்துக்கொள்ளும் காட்சிகளிலும் ஒரு சராசரி காதலனை கண்முன் நிறுத்துகிறார். மடோனா பிரேக்கப் செய்த பிறகு இறுக்கமான மனநிலைக்கு செல்லும் போதும், அந்த காட்சிகளில் நன்றாக நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். மடோனாவை விட, இமயாவுடனான காட்சிகள் அதிகம். அந்த காட்சிகளிலும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்.
இரண்டு நாயகிகளில் அறிமுக நாயகியாக இமயா. பல படங்களில் நடித்தவர் போன்று காட்சிகளை கையாண்டிருக்கிறார். நல்ல நடிப்பினை வெளிப்படுத்துவதுடன் வசீகரமாகவும் இருக்கிறார்.
மடோனா செபாஸ்டியன், நடிப்பினை நன்கு வெளிப்படுத்தும் கதாபாத்திரம் அதை திறம்பட செய்திருக்கிறார். பிரேக்கப் செய்த பிறகு, காதலனை மீண்டும் சந்திக்கும் சமயத்தில் தடுமாறும் அந்தகாட்சியில் உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
சனத்தின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி, அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதா ஆகியோர் ரசிகர்களை ரிலாக்ஸ் செய்யும் வேலையை செய்திருக்கிறார்கள். அது ரசிக்கும்படியாகவே இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, அனைத்து காட்சிகளையும் அழகாக படம்பிடித்திருக்கிறார். ஜெய்ப்பூர் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது.
ஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் நன்றாகவே இருக்கிறது.
ஒரு காதலன், இரண்டு காதலிகள் இவர்கள் மூவருக்கும் உள்ள காதலை அழகாகவும், வரம்பு மீறாமலும், முழுக்க முழுக்க காதல். கொஞ்சம் சிரிப்பு. என காட்சிகளை ரசிக்க வைக்கிறார், எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் குமார்.
மொத்தத்தில் ‘ஹார்ட்டின்’ – இதயம் வருடுகிறது!












