வி.கே.வி. பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் வடிவேலன் பி.ஜே. மற்றும் விமல்ராஜ் சிவசாமி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் “இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி”
இந்த படத்தில் ஏ.ஆர்.சுரேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க, மேலும் எம்.சதீஷ்குமார், சோனியா தாஸ், நிஷா, ‘நன்னாரி’ வினோத், தீபா சங்கர், அசோக் பாண்டியன், ‘திருப்பாச்சி’ பெஞ்சமின்,’மீசை’ ராஜேந்திரன், பிர்லா போஸ், ‘மஸ்காரா’ அஸ்மிதா, ஜெயந்திமாலா, மணிமேகலை, செ.ரா. ராஜேஷ் உட்பட பல நடித்துள்ளனர்
இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர்.சுரேஷ்பாபு. ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்ய, புவனேஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
‘அசால்ட்’ மதுர சண்டை பயிற்சி அளிக்க, சந்தோஷ்.கே இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் சினேகன், ஏ. ஆர். சுரேஷ்பாபு, பூவரசன், எம். சதீஷ்குமார் நால்வரும் எழுதியுள்ளனர். கலை இயக்கம் – செல்வராஜ்
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும்,, பாண்டிச்சேரியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இந்த படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது. இசை மட்டும் டிரைலர் ரேட் விழா விரைவில் நடைபெற உள்ளது.












