மத்திய அரசின் 2024-ம் ஆண்டுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டது.இதில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிறந்த தமிழ்ப் படம் என்ற விருதுக்கு தேர்வாகியுள்ளது மேலும், சிறப்பு பிரிவில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் மூலம் தனுசுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது .கார்த்தி அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன்’ படத்துக்கு சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜி.வி பிரகாசுக்கும் ,சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதையும், ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான விருதையும் ‘அமரன்’ படம் தட்டி சென்றிருக்கிறது.

சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்திற்காக அனல் அரசுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது ‘மகாராஜா’ படத்தில் நடித்த சாச்சனா நமிதாஸுக்கும் கிடைத்துள்ளது.சிறந்த நடிகைக்கான விருதை ‘ஆர்டிகிள் 370’ படத்துகாக நடிகை யாமி கெளதம் தட்டிச் சென்றுள்ளார்
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ 2 படத்துக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த வசனத்துக்கான விருதை லக்கி பாஸ்கர் (தெலுங்கு) படத்திற்காக வெங்கி அட்லுரி பெறுகிறார்.
சிறந்த நடிகருக்கான விருது ‘பிரம்மயுகம்’ படத்துக்காக மம்முட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது
இயக்குநர் ஃபாசில் முகமதுவின் ‘பெமினிச்சி பாத்திமா’ என்ற படத்துக்கு சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது ‘ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர்’ படத்துக்காக ரன்தீப் ஹூடாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது பட்டியல் :
1,சிறந்த தமிழ் படம் – ராயன்
2, சிறந்த தெலுங்கு படம் – கமிட்டி குர்ரோலு
3, சிறந்த மலையாளம் படம் – ஃபெமினிச்சி ஃபாத்திமா
4, சிறந்த கன்னடம் படம் – மித்யா
5, சிறந்த இந்தி படம் – ஸ்ரீகாந்த்
6, சிறந்த ஸ்டண்ட் கோரியோகிராபி – அனல் அரசு (மகாராஜா)
7, சிறந்த நடன அமைப்பாளர் – விஜய் கங்குலி (ஆஜ் கி ராத், ஸ்ட்ரீ 2)
8,சிறந்த இசையமைப்பாளர்(பின்னணி இசை ) – ஜிவி பிரகாஷ் குமார் (அமரன்)
9, சிறந்த இசையமைப்பாளர்(பாடல்) – சாஸ்வத் சச்தேவ்(ஆர்டிக்கல் 370(இந்தி))
10, சிறந்த ஒப்பனை – பி ரவி குமார்(கமிட்டி குர்ரோலு(தெலுங்கு))
11, சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – தீபாலி நூர் மற்றும் ஷீத்தல் ஷர்மா(புஷ்பா 2)
12, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் – நிதின் ஜிஹானி சௌத்ரி(கல்கி 2898 ஏடி(தெலுங்கு))
13,சிறந்த ஒலி வடிவமைப்பு – மானஸ் சௌத்ரி, ‘பூல் புலையா’ (இந்தி)
14,சிறந்த திரைக்கதை( வசனகர்த்தா) – வெங்கி அட்லூரி, ‘லக்கி பாஸ்கர்'(தெலுங்கு))
15, சிறந்த திரைக்கதை எழுத்தாளர் – யோகேஷ் தேஷ்பாண்டே (ஸ்வர்க்ககந்தர்வ சுதிர் ஃபட்கே(மராத்தி))
16, சிறந்த திரைக்கதை எழுத்தாளர் – சுகுமார் (புஷ்பா 2(தெலுங்கு))
17, சிறந்த ஒளிப்பதிவாளர் – ஷெஹ்னாத் ஜலால்(பிரம்மயுகம்(மலையாளம்))
18, சிறந்த பின்னணி பாடகி – வைக்கம் விஜயலட்சுமி( அங்கு வானக் கோணிலு…(ஏ.ஆர்.எம்.(மலையாளம்))
19, சிறந்த பின்னணி பாடகர் – அபய் ஜோத்புர்கர்(கராத் கணபதி(மராத்தி))
20,சிறந்த குழந்தை நடிகர்(2)- ரித்திமான் பானர்ஜி, தபோமோய் தேப், கீதாஸ்ரீ சக்ரவர்த்தி(பெங்காலி))- அருண்தேவ் போத்துலா ‘சின்ன கதா காடு’ (தெலுங்கு)
21, சிறந்த துணை நடிகை(2) – ரூபா வர்கடி, ‘மித்யா'(கன்னடம்)- சச்சனா நமிதாஸ்(மகாராஜா)
22, சிறந்த துணை நடிகர் – சஞ்சய் மிஸ்ரா(பக்ஷக்(இந்தி)
23, சிறந்த நடிகர் – கார்த்திக் ஆர்யன்(சந்து சாம்பியன்(இந்தி))
24, சிறந்த நடிகர் – மம்மூட்டி பிரம்மயுகம்(மலையாளம்)
25, சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் பெரியசாமி(அமரன்)
26, சிறந்த குழந்தை படம் – 35 சின்ன கதா காடு(தெலுங்கு)
27, சிறந்த சமூக அக்கறைக்கான படம் – ‘கேப்டன் மில்லர்’
28, சிறந்த பொழுதுபோக்குக்கான படம் – ‘கல்கி 2898 ஏடி’
29, சிறந்த படம் – ‘ஆர்ட்டிக்கல் 370’ (இந்தி)
சிறப்பு பிரிவு:
30. மெய்யழகன்(ஒலிக்கலவை) – சுரேண் ஜி
31, கேப்டன் மில்லர்(நடிகர்) – தனுஷ்












