சீயானின் கடாரம் கொண்டான்! அதிரடி கமல்!

அரசியலுக்கு வந்தாலும் சினிமாவை விடுவதாக இல்லை உலக நாயகன். 

பொதுவாக அரசியலில் இருக்கும் நடிகர்கள் பதவியில் அமர்கிற வரை சினிமாவைத் தொடர்வார்கள். உதாரணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கேப்டன் விஜயகாந்த் என சொல்லலாம்.

அரசியலில் இறங்கிவிட்டாலும் நடிப்பு,தயாரிப்பு என இரண்டும் இணைந்து மும்முனையிலும் முனைப்புக் காட்டுகிறார் கமல். 

இவரது தயாரிப்புதான் கடாரம் கொண்டான். டிரிடன்ட் ஆர்ட்ஸ் இணை தயாரிப்பு.

சியான் விக்ரமின் லுக்கே தனி,!

கைவிலங்கு. வலது கை முழுக்க பச்சை .சால்ட் பேப்பர் நியூ லுக்.பலத்த அதிரடி கொடுக்கிறது போஸ்டர்.

இவரது ஜோடி அக்சராஹாசன். இசை ஆஸ்தான ஜிப்ரான். ஒளிப்பதிவு ஆர்.ஸ்ரீநிவாஸ் .இயக்கம் ராஜேஷ்.எம் .செல்வா.

கதை சரித்திரம் தழுவியதாக தெரியவில்லை. கடாரம் என்பது மலேசியாவில்  பூசாய் பள்ளத்தாக்கில் இருக்கிறது..அதை வென்றவன்தான் ராஜேந்திர சோழன் .அந்த சோழனின் மறு பிறவியா சியான்? 

எப்படியும் கதை சொல்வார்கள் அல்லவா,அப்ப தெரிந்து கொள்ளலாம்.