“என் அம்மாவுக்கு வழிபடும் உரிமை இல்லையா?”

சாமியே சரணம் பொன் ஐயப்பா!
இன்று சபரிமலையில் நடை திறப்பு. சிலரது வாய்களுக்கு சபை திறப்பு.
சும்மா இருந்த பிரகாஷ்ராஜ் சாமி ஆடத் தொடங்கி விட்டார்.
“கடவுளை வழிபடுவதற்கு பெண்களை அனுமதிக்காத மதத்தை நான் ஏன் மதிக்க வேண்டும்? தேவை இல்லை. ஒவ்வொருவரும் பெண்ணில் இருந்து வந்தவர்கள் தான்.!அந்த பெண்ணுக்கே வழிபட அனுமதி இல்லை என்றால் தாய்க்கு என்ன மரியாதை? தாய் நாடு என்கிறோம்.ஆனால் அந்த தாய்க்கு பெருமை சேர்க்கும் வகையில் நடக்கிறோமா? என் அம்மாவை அனுமதிக்காத பக்தர்கள் உண்மையான பக்தர்கள் அல்லர்”என்கிறார் பிரகாஷ்ராஜ்.