சர்கார் படம். வக்கீலுடன் தமிழக அரசு ஆலோசனை!

சர்கார் படக்குழு மீது செம கடுப்பில் இருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள்.

தலைவியின் உண்மைப் பெயரைச்சொல்லி நையாண்டி மேளம் அடித்து ஆடி விட்டார்களே என்கிற ஆவேசத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்கிற ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது.

சட்ட அமைச்சர் சண்முகம் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய நாராயணனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  அதிமுக எம்.எல்.ஏ,க்களை விட  ஆதரவுடன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி இருக்கிற தனியரசு தைரியமாகவே பேசி இருக்கிறார்.

“விஜய், முருகதாஸ் இருவரையும் கைது செய்ய வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார். கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தான் தனியரசு.