சென்னையில் தொடர்மழை; நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது.இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் 2 நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் காற்றுடன் மிதமான பெய்து வருகிறது. இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந் நிலையில் சென்னை,மற்றும் காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து சென்னை மற்றும் காஞ்சி புரம், திருவள்ளூர்,விழுப்புரம் ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த சென்னைபல்கலை.தேர்வுகள்ஒத்திவைக்கபட்டுள்ளதாகவும்,ஒத்திவைக்கப்பட்ட நாளைய தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னை பல்கலை. துணைவேந்தர் அறிவித்துள்ளார்.