வழுக்கை படங்களுக்குள் முட்டல் , மோதல்.பாவம்யா!

இந்தப்படத்தை யார் காப்பி அடிச்சாங்க ,அல்லது எங்கேர்ந்து திருடுனாங்க என்பது பிரச்னை இல்லை. எப்ப ரிலீஸ் பண்றது என்பதுதான் சிக்கல்.

அப்படி என்னய்யா படம்னு கேக்கிறீங்களா?

வெளக்கமா சொல்வோம்.!

பாலா என்பது ஒரு படம். இதன் சிறப்பம்சம் வழுக்கை. சொட்டைத் தலையை பற்றிய கதை. அமர் கவுசிக் என்பவர் இயக்குநர்.

இன்னொரு படம் ‘உஸ்டா ஷமன் ‘.அபிஷேக் மங்கட்  என்கிற பாலிவுட் டைரக்டரின் படம். இதுவும் சொட்டைத்தலை பிரச்னைதான் .

இந்த  சொட்டைத்தலைகள்  பற்றிய படங்களையும் தீபாவளிக்கு வெளியிடத் திட்டம். 

ஆனால் அடுத்த சொட்டைக்குத் தெரியாமல் தன்னுடைய சொட்டையை  முதலில் வெளியிட்டு விட  வேண்டும் என்று இரண்டு சொட்டைப்படங்களின் தயாரிப்பாளர்களுமே நினைத்தார்கள். அங்கேதான் சிக்கல்.

பாலிவுட்டின் பெரிய படங்கள் பெரும்பாலான தியேட்டர்களை பிடித்துக் கொண்டதால் இந்த சொட்டைகளுக்கு இடம் கிடைக்காமல் போய் விட்டது. பாலா  படம் நவம்பர் 8 ஆம் தேதி ரிலீஸ்  என்பது தெரியாமல் தன்னுடைய சொட்டை படத்தை 7 ஆம் தேதிக்கு வெளியிட தீர்மானித்தார் அபிஷேக் .ஆனால் இது பாலாவுக்கு தெரிந்ததும் அடடா நாம்பல்ல பிந்திட்டோம் என்கிற பீல் 

ஆனாலும் விதியை வெல்ல முடியுமா? தியேட்டர்கள்  பிரச்னையினால் ஒரு சொட்டை  இன்றும் (  30 ) மற்றோரு சொட்டை நவ,1 ஆம் தேதியும் வெளியாகின்றன.

எந்த வழுக்கை ஜெயிக்குமா?