லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியானது. ‘மாஸ்டர்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். முன்னதாக இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் அவர்களாகவே (ஸ்ரீகாந்த்,டான்ஸ் மாஸ்டர் தினேஷ்நடித்து வரும் படத்தின் பெயர் தான் சம்பவம்) சம்பவம் என்ற டைட்டிலை டிசைன் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,தயாரிப்பு தரப்பு அதை மறுத்து அறிக்கை வெளியிட்டு இருந்தது.தற்போது சமூக வலைத்தளங்களில் விஜய்யின் மாஸ்டர் படத்தலைப்பு டிரெண்டாகி உள்ளது.












