ரசிகர்கள் மீது போலீசார் தடியடி!பாய்ந்து வந்த விஜய்!!
நடிகர் விஜய் வீட்டில் கடந்த 23 மணிநேரத்திற்கும் மேலாக நடந்து வந்த வருமானவரித்துறையினரின் சோதனை முடிந்து, இன்று காலை நெய்வேலி சுரங்கப்பகுதியில் நடந்து வரும் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய் மீண்டும் கலந்துக்கொண்டார்.
அப்போது அங்கு திடீரென திரண்டு வந்த ‘பாஜக’வினர் சிலர், விஜய் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்த தகவல் அறிந்து அங்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் திரண்டனர்.
இதையடுத்து அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதம் ஏது நடைபெறாமல் தடுக்க ,
போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த நடிகர் விஜய் மின்னலென சம்பவ இடத்திற்கு காரில் வந்தார்.அவர் தனது ரசிகர்களை சமாதானப்படுத்தும் விதமாக கையசைத்து கலைந்துப்போகச் சொன்னார்.இதையடுத்து விஜய் ரசிகர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.பின்னர் விஜய் தனது காரில் ஏறிபடப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இச் சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.