எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம்,மாஸ்டர் அனிரூத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பினை பிலோமின் ராஜ் கவனிக்கிறார் .
இதில், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார் .
விஜய் சேதுபதி, விஜய்யுடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இவர்களுடன், ஆண்ட்ரியா, சாந்தனு , அர்ஜுன் தாஸ் ,அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன், கௌரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .
அனிரூத் இசையில் விஜய் குரலில் ” ஒரு குட்டி கதை ” என தொடங்கும் பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார் , இந்த பாடலுக்கு அருண் ராஜா காமராஜ் வரிகளை எழுதியுள்ளார் .பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று மாலை 5 மணிக்கு இப்பாடலின் லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் .இதற்கு முன்பு கத்தி படத்தில் அனிருத் இசையில் செல்பி புள்ள பாடலை தளபதி விஜய் பாடியது குறிப்பிடத்தக்கது.இப்படத்தை வரும் ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர் .