கவர்ச்சி நடிகையின் கழுதைப்பால் குளியல்..அடடடே படம்!

கருப்பு நிறமானாலும் கட்டுடல் கொண்டவள் எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா.

தனது மேனியின் மினுமினுப்புக்காக கழுதைப்பாலில் தமிழக  முத்துகளைப்  போட்டு குளிப்பாளாம். அவளைப்போலவே பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதெலா ஒருவரும் குளித்திருக்கிறார் என்றால் அது ஒரு நாள் கூத்து.! கொரானா வைரஸ் தடுப்பு நிதியாக சில கோடிகள் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.

‘பாலிருக்கும் கிண்ணம் மேலிருக்கும் வண்ணம் நீ செய்த கோலமல்லவா’ என்கிற தமிழ்ச்சினிமா ஒன்றின் பாடல் வரிகளை நினைவு படுத்துகிறவர்தான் இந்த ஊர்வசி

என்ன செய்வது ?கொரானா கொண்டு வந்த லாக்டவுனின் விளைவு நடிக நடிகைகள் வேலை  வெட்டி இல்லாமல் அவர்களுக்குத் தெரிந்த வித்தைகளைக் காட்டி வருகிறார்கள்.படம் எடுத்துப்  போட்டு ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 மக்களை பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஐந்தாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் பிரபலங்கள் பலரும் சேலஞ்ச் டாஸ்க்குகள், டிக்டாக் செய்வது, டான்ஸ் வீடியோ என தங்கள் பொழுதை சமூக வலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.

சரி விசயத்திற்கு வருவோம். ,   பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதேலா சற்றே மாறுபட்டு  கழுதைப் பாலில் ரோஜா இதழ்களை மிதக்கவிட்டு (பசுப் பாலா,எருமைப்பாலா,பவுடர் பாலா   என்பதை அவர் தான் விளக்க வேண்டும்) குளிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.