
ஆந்திராவில் நம்பர் ஒன் நடிகர்களில் விஜய் தேவரகொண்டாவும் ஒருவர்.
இவரை வைத்து பாலிவுட் கரண்ஜோகர் இரு மொழிகளில் எடுக்கும் டைகர் படத்தில் நாயகியாக நடிப்பவர் அனன்யா பாண்டே. இந்தி தெலுங்கு இரு மொழகிகளிலும் அம்மையார் படு பிசி. விஜய் -அனன்யா இருவருடைய போட்டோ ஷூட் படங்களும் இணையத்தில் வைரல் ஆகி விட்டன .
இன்ஸ்ட்டாவில் படுபிஸியாக இருக்கிற அனன்யா அடிக்கடி சூடேற்றிவிடுவார்.அந்த அளவுக்கு படங்கள் கவர்ச்சியாக இருக்கும்.கனவுக்கன்னி என்றே சொல்லுமளவுக்கு இவருக்கு 12.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பாலிவுட்டில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சுன்கி பாண்டேவின் மகள் தான் நடிகை அனன்யா பாண்டே.
சமீபத்தில் தனது தோழி ஷனாயா கபூருடன் அனன்யா பாண்டே படு கிளாமர் உடையில் இணையத்தையே சூடேற்றும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்., அனன்யா பாண்டேவின் காதலர் குறித்த ரகசியத்தையும் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் மூலம் அவரது தோழி அம்பலமாக்கி உள்ளார். 24 வயது ஹாலிவுட் இளம் நடிகரான டிமோதி சாலாமெட் தான் காதலர் என்ற தகவல் கசிந்துள்ளது. டிமோதி சாலாமெட்டை தான் அனன்யா காதலிக்கிறார் என்கிற ரகசியம் தற்போது சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை.ஹாலிவுட் நடிகர் வேறு ரேஞ்சில் இருப்பவர்,












