ஆக்சன் ஹீரோயினாகிறார் விஜய் பட நாயகி.!

  ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தவர்  மாளவிகா மோகனன் .

, விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் இவர்தான்  கதாநாயகி.. இந்த படம் வெளியாகும் முன்னரே அவருக்கு பல மொழிகளில் இருந்தும் பட  வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்றாலும் ,நல்ல கதை மற்றும் கேரக்டரை  தேர்வு செய்து நடிக்கிறாராம் மாளவிகா மோகனன் .

 தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க மாளவிகா மோகனன் கமிட் ஆகியுள்ளார்.

மறைந்த  ஸ்ரீதேவி நடித்த என்ற ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் தான் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தில் அவர் ஆச்சன்  நாயகியாக நடிப்பதாகவும், இந்த படத்தில் அவருக்கு சண்டைக்  காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் இதற்காக மாளவிகா மோகனன், மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சித்தாந்த் சதுர்வேதி நாயகனாக நடிக்கிறார். இப் படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்கிறார்கள். 

விஜய்யுடன் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.