‘108’முறை சூரிய நமஸ்காரம்! சமந்தாவின் அடுத்த அதிரடி!!

கொரோனா ஊரடங்கில் வீட்டிலேயே சும்மா கிடக்காமல் நடிகை சமந்தா. யோகா மற்றும் உடற்பயிற்சி இவைகளுடன்,வீட்டிலேயே தோட்டம் அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.கேரட் பயிரிட்ட சமந்தா, தன் வீட்டிலேயே காய்கறிகள், கீரை வகைகள், பூக்கள் உள்ளிட்டவற்றை பயிரிடும் முறைப்படி தன் வீட்டில் தோட்டத்தை அமைத்துள்ளார்.

இந்த வாரம் கேரட் வாரம் என சமூக வலைதளத்தில் கேரட்டுகளுடன் தோன்றும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டார். அவருக்கு பாராட்டுக்களும் குவிந்தது .இந்நிலையில் சமந்தா அடுத்த அதிரடியாக தற்போது 108 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் முறையை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ’ஒரு நல்ல தொடக்கமாக இந்த வாரம் முதல் 108 முறை சூரிய நமஸ்காரத்தை ஆரம்பிக்க உள்ளேன். எனது பயிற்சியாளர் சந்தோஷ் அவர்களுக்கு நன்றி’ இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்