பாலியல் புகாரில் சிக்கிய பிரபல நடிகர் மகன்! தாயும் உடந்தை என்றும் புகார்!!

ஒரு காலத்தில் பாலிவுட்டையே கலக்கியவர் நடிகர் மீதுன்  சக்ரவர்த்தி.இவரது மனைவி நடிகை யோகிதா பாலி . இவர்களுக்கு மகாக்ஷாயா என்ற மகன் உள்ளார்.இந்நிலையில்,மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி-நடிகை யோகிதா பாலி மற்றும் மகன் மகாக்ஷய் ஆகியோர் மீது போலீசார் பாலியல்புகார்  மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக கூறி கடந்த அக்டோபர் மாதம் 15 ம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் இவ் வழக்கினை தொடுத்துள்ளார்.அந்த பெண் கொடுத்த புகாரில்,” கடந்த 2015 ஆம் ஆண்டு முதல்மஹாக்ஷயுடன் உடல் ரீதியிலான உறவு கொண்டிருந்ததாகவும், அதற்கு ஒரு வகையில் அவரது தாயாரும் உடந்தையாக இருந்ததாகவும், ஒரு முறை குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து  கொடுத்து தன் விருப்பமின்றி உறவிற்கு பலவந்த படுத் தியாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த புகாரில்,தன்னை திருமணம் செய்து கொளவதாக ஆசை வார்த்தைகளை கூறியே தன்னை நாசமாக்கினார்

ஆனால் இன்று வரை அவர் கொடுத்த வாக்கினை ஒருபோதும் நிறைவேற்றவில்லை என்று அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கிடையில், முதலில் தனது புகாரை பதிவு செய்ய காவல்துறை மறுத்துவிட்டதாகவும்,,ஆனால் டெல்லி உள்ளூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னர், ஓஷிவாரா காவல் நிலையம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மும்பை திரையுலகம், தடை செய்யப்பட்ட போதை மருந்து விவகாரத்தால் கதி கலங்கியுள்ள நிலையில் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகனின் போதை மருந்து கொடுத்து கற்பழிப்பு புகார் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.